×

புதுக்கோட்டையில் திருகோகரணம் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி: அதிகளவு தூக்கமாத்திரை சாப்பிட்டதே காரணம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருகோகரணம் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் காவல் உதவி ஆய்வாளர். கடந்த வாரம் புதுக்கோட்டை ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதில் மனைவிக்கு ஆதரவாக வழக்கறிஞர் கலில் சென்றுள்ளார். அப்போது கதிருக்கு அப்பெண்ணின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர் கலில் அந்த பெண்ணின் கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தரக்குறைவாக நடத்தியதாகவும் திருகோகரணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்கறிஞர்கள் அவரை உடனடியாக கைது செய்யவில்லை, காவல் உதவி ஆய்வாளர் முறையாக பணியாற்றவில்லை என்று கூறி அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் 2 நாட்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியதில் காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்று உறுதி அளித்த பின்னரே சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை திருகோகரணம் காவல் நிலையத்தில் வருகை பதிவேட்டில் தற்கொலை முடிவுக்கு வழக்கறிஞர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்று எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அவர் வீட்டிற்கு சென்று 15 தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் அவரை மீட்டு சக காவலர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வருகை பதிவேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுக்கோட்டையில் திருகோகரணம் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி: அதிகளவு தூக்கமாத்திரை சாப்பிட்டதே காரணம் appeared first on Dinakaran.

Tags : Thirugokaranam police ,Pudukottai ,District ,Tirukokaranam ,Police Assistant Inspector ,Sangeetha ,Thirugokaranam ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!